வெனிசுலா பொறுப்பு அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்ட வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் சிறையில் உள்ளனர்.
இதனால் அந்நாட்டின் பொறுப்பு அதிபராக டெல்சி ரோட்ரிக்சை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்நிலையில், டெல்சி ரோட்ரிக்சுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், வரும் ஆண்டுகளில் இந்தியா- வெனிசுலா உறவுகளை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் தொலைநோக்குப் பார்வையுடன், அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு கூட்டாண்மையை விரிவுபடுத்த ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.
















