மகாராஷ்டிர துணை முதலமைச்சராக அஜித் பவாரின் மனைவி, சுனேத்ரா பவார் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 28ம் தேதி மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அஜித்பவார், அவரது பாதுகாவலர், விமானி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அவர் வகித்த பொறுப்புகளை தங்களுக்கே வழங்க வேண்டுமென கூட்டணி கட்சியான தேசியவாத காங்சிரஸ் தலைவர்கள், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் அப்பதவிக்கு அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் பரிந்துரை செய்யப்பட்டார்.
இதற்கு முதலமைச்சர் பட்னாவிஸ் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மகாராஷ்டிர துணை முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பதவியேற்க உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அவருக்கு கலால் மற்றும் விளையாட்டு துறை இலாகாக்கள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
















