வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடுவதற்கு முன்னாள் பிரதமர் நேரு ஒப்புக்கொள்ளவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்…
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தமிழ் பேராயம் சார்பில் பாரிவேந்தர் தமிழ் அறக்கட்டளைகள் தொடக்க விழா, வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டு விழா மற்றும் மாவீரர் தின விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், வந்தே மாதரம் பாடல் குறித்த வரலாற்று நிகழ்வுகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடுவதற்கு முன்னாள் பிரதமர் நேரு ஒப்புக்கொள்ளவில்லை எனவும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.
















