புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.
காட்டுப்பட்டியில் உள்ள முனீஸ்வரர் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.
இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 650 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றனர். போட்டியை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மற்றும் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப் போட்டு அடக்கினர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
















