பெரம்பலூர் அருகே, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரையாக சென்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார், அவர்கள் மீது மோதியது. இதில் பெண் பக்தர்கள் மலர்கொடி, விஜயலட்சுமி , சசிகலா, சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த ஜோதிலட்சுமி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் கெளதமை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















