கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இடம் தொடர்பான பிரச்னையில் முதியவரின் மண்டையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சங்கராபுரம் அருகே கீழ்ப்பட்டு பகுதியில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாதன், தனது வீட்டிற்கு வெளியே கழிவறை ஒன்றை கட்டி பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கழிவறை அமைந்துள்ள அந்த இடம் தொடர்பாக அவருக்கும் பக்கத்து வீட்டுக்காரரான மாசிலாமணிக்கும் இடையே பிரச்னை இருந்ததாக தெரிகிறது.
இத்தகைய சூழலில், ரங்கநாதனிடம் தகராறு செய்த மாசிலாமணி, கழிவறையை சேதப்படுத்தியதுடன், இரும்பு ராடை கொண்டு ரங்கநாதனையும் கடுமையாகத் தாக்கினார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ரங்கநாதன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாசிலாமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
















