திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தைத்தேர் உற்சவம் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும்.
இந்தாண்டிற்கான தைத்தேர் உற்சவம் கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை வெகு விமர்சியாக நடைபெற்றது.
இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு உபயநாச்சியார்களுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து நான்கு உத்தர வீதிகளிலும் திரளான பக்தர்கள் ஒன்றுகூடி பக்தி கோஷமிட்டுவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
















