தைப்பூச விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
தைப்பூச தினத்தன்று பக்தர்கள் விரதமிருந்து முருகன் கோயில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி நாளை தைப்பூசம் தினம் என்பதால், தென்காசி, விருதுநகர், ராஜபாளையம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், விரதமிருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
காவடி சுமந்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, தனி வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதனிடையே பக்தர்களின் வருகையை ஒட்டி, திருச்செந்தூரில் 750க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















