தைப்பூச திருவிழா - திருத்தணி, வயலூர், சென்னிமலை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
Feb 1, 2026, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தைப்பூச திருவிழா – திருத்தணி, வயலூர், சென்னிமலை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 1, 2026, 04:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, சந்தன காப்பு, தங்க கிரீடம், வைர ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளினார். இதனை அடுத்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல திருச்சி வயலூரில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மனமுருக சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது பால்குடம் மற்றும் காவடி சுமந்து வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த தைப்பூச தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தேர் விழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து, நாள் தோறும் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டத்தையொட்டி அதிகாலை முருகப்பெருமான் மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து, வள்ளி – தெய்வானை உடன் முத்துகுமாரசாமி தேரில் எழுந்தருளினார். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags: lord muruganvadapalani murugan templethai poosamthai poosam celebration
ShareTweetSendShare
Previous Post

தைப்பூச திருவிழா – வடபழனி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

Next Post

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சலுகைகள் – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

Related News

அமெரிக்காவில் 300 நகரங்களில் லட்சக்கணக்கானோர் போராட்டம்!

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு: 133 பேர் பலி

இந்தியா முதன்மை நாடாக திகழ்வதற்கான பட்ஜெட் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

140 கோடி இந்தியர்களுக்கான பட்ஜெட் – பிரதமர் மோடி

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவிகளுக்கு விடுதி! – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

2026-27 பட்ஜெட்டின் தாக்கத்தால் விலை குறையும் பொருட்கள் எவை?

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சலுகைகள் – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

தைப்பூச திருவிழா – திருத்தணி, வயலூர், சென்னிமலை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

தைப்பூச திருவிழா – வடபழனி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

மாநிலங்களுக்கான வரி பகிர்வு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டில் காந்தி பெயரில் புதிய திட்டம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையில் அமையும் – அண்ணாமலை வரவேற்பு!

தனி நபர் வருமான வரி விலக்கில் எந்த மாற்றமும் இல்லை -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்னென்ன அறிவிப்புகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies