அன்புமணி தரப்பிற்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது தொடர்பான வழக்கில் தலைமை தேர்தல் ஆணையம் 3 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்புமணி தரப்பிற்கு தேர்தல் ஆணையம், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பான மனு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அன்புமணியின் பதவிக்காலம் கடந்தாண்டு மே மாதமே முடிவடைந்து விட்டதாகவும். அவர் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்க கூடாது என்றும், சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக ராமதாஸ்-க்குதான் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் எனவும் அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான விவகாரத்தில் 3 வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
















