பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! - அடுத்து வெளியான அறிவிப்பு
Feb 3, 2026, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! – அடுத்து வெளியான அறிவிப்பு

Manikandan by Manikandan
Feb 3, 2026, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கான பரஸ்பர வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடியுடன் பேசியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர் தனது சிறந்த நண்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, நாட்டின் சக்தி வாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர் என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப்,

வர்த்தகம், ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதித்ததாகவும் கூறியுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு அமெரிக்காவிடம் கூடுதலாக எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாகவும், வெனிசுலாவிடம் இருந்தும் வாங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தற்போது நடக்கும் உக்ரைன் போரால் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதை நிறுத்த உதவும் என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப்,

பிரதமர் மோடி மீதான மரியாதை , நட்பு காரணமாகவும், அவரது கோரிக்கையின் பேரிலும் இந்தியா – அமெரிக்கா இடையே உடனடியாக அமலுக்கு வரும் வகையில் வர்த்தக ஒப்பந்தத்திற்கு தாங்கள் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறையும் என்று சுட்டிக்காட்டியுள்ள ட்ரம்ப்,


அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்தியா பூஜ்ஜியமாக குறைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்க பொருட்களை கூடுதலாக வாங்க மோடி உறுதிபூண்டுள்ளதாக கூறியுள்ள ட்ரம்ப், 500 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி சார்ந்த பொருட்களை இந்தியா வாங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா உடனான நட்பு சிறப்பானதெனக் கூறியுள்ள ட்ரம்ப், வரும் காலங்களில் இது மேலும் வலுப்பெறும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தானும், பிரதமர் மோடியம் காரியங்களைச் சாதிப்பவர்கள் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். (OUT)

Tags: AgreementUnited StatesTrumptrump newsUS President Trumptariff18 percent.25 percentfinalizedbjp indiatn bjp
ShareTweetSendShare
Previous Post

மருத்துவமனையில் எச்.ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்!

Next Post

வரி குறைக்கப்பட்டதற்கு 140 கோடி மக்கள் சார்பில் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி நன்றி!

Related News

தமிழகம், கேரளா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் அரிய வகை கனிம வளங்கள்! – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி

பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க புதுச்சேரிக்கு வரும் பிரதமர் மோடி..!

வரி குறைக்கப்பட்டதற்கு 140 கோடி மக்கள் சார்பில் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி நன்றி!

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் வரும் ரயில்வே திட்டங்கள் என்னென்ன? – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

எல்லையில் ஆக்கிரமிப்பா ? – ராகுல் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்

சிந்து நதிநீர் ஒப்பந்தம் விவகாரம் -வெளியான தீர்ப்பு.. இந்தியா கொடுத்த பதிலடி!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயை பார்த்து திமுகவுக்கு பயம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

அலுவலகத்தில் திட்ட பணிகளுக்காக கமிஷன் பேரம் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரல்

மன்னர்களை பற்றி சர்ச்சை கருத்து சொன்ன திருவமாவளவன்! – கொதித்தெழுந்த இந்து முன்னணி!

உலக தரத்தில் தமிழக ரயில்வே! – தெற்கு ரயில்வே பொது மேலாளர்!

“புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில் கஞ்சாவா?” – அண்ணாமலை ஆவேசம்!

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! – அடுத்து வெளியான அறிவிப்பு

மருத்துவமனையில் எச்.ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்!

தமிழ்நாடு அரசு அறிவித்த துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடுதல் குழுக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு!

“திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – மாநிலங்களவையில் அதிமுக எம்.பி குற்றச்சாட்டு

டாஸ்மாக் கடையின் பாரில் தொழிலாளி தற்கொலை – புகாரளித்த பெண்கள்… போலீசார் முன்பே மிரட்டிய உரிமையாளர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies