திமுக நிர்வாகியின் ஆதரவாளர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தேனி எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே போடிதாசன்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம், சில நாட்களுக்கு முன்பு திமுக நிர்வாகியான சுப்புராஜ் என்பவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் இருதரப்பிடையே அங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. பின்னர், சுப்புராஜின் மகன் பவுன்ராஜ் கொடுத்த புகாரில் பாலமுருகனையும், பாலமுருகனின் தாய் ஜோதி கொடுத்த புகாரில் பவுன்ராஜுக்கு தொடர்புடைய நபரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனால் பவுன்ராஜும், அவரது கும்பலும் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், பொய் புகாரில் கைது செய்யப்பட்ட தனது மகன் பாலமுருகனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஜோதி மனு அளித்தார்.
















