தேர்தலில் தோல்வி அடைந்த கட்சிகள், வெறும் விளம்பரங்களுக்காக நீதிமன்றங்களை அணுக கூடாதென ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பீகார் சட்டப்பேரவை தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டதாகக்கூறி ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வெறும் விளம்பரங்களுக்காக நீதிமன்றங்களை அணுக கூடாதென நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
ஜன் சுராஜ் கட்சி எத்தனை ஓட்டுகள் வாங்கியது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விளம்பரம் தேடுவதற்காக நீதித்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதா என்றும் சாடினர்.
அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக இலவசப் பொருட்கள் வழங்கி வருவது தொடர்பாக தாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கூறிய நீதிபதிகள்,
இருப்பினும் தேர்தலில் எல்லாவற்றையும் இழந்த கட்சி சார்பிலான இந்த வழக்கை விசாரிக்க தாங்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்தனர்.
















