மத்திய அரசின் அம்ப்ரெல்லா திட்டத்தின் மூலம் கோவை சோமனூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
“மத்திய அரசின் ‘அம்ப்ரெல்லா திட்டத்தின் கீழ், தென்னக ரயில்வேக்கு உட்பட்ட பல்வேறு ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கோவையில் உள்ள சோமனூர் ரயில் நிலையத்திலும் பணிகள் நடைபெற்றன. ஆறரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த பணிகளில் தரைத்தளம் சீரமைத்தல், நடைமேடையின் நீளம் மற்றும் உயரத்தை அதிகரித்தல், கூடுதல் கழிவறை வசதிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன.
மத்திய அரசின் இந்த திட்டத்தை வரவேற்ற பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
















