உலக நன்மை வேண்டி சேலத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆசிரமம் மற்றும் தேசிய சேவா சமிதி இணைந்து நடத்திய ஸ்ரீ தன்வந்திரி மகா ஹோமத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
சேலம் மரவநேரியில் உள்ள தேசிய சேவா சமிதி வளாகத்தில் உலக நன்மை வேண்டியும், மக்கள் ஆரோக்கியத்தை பெறவும் கடந்த 2002 முதல் ஸ்ரீ தன்வந்திரி மகா ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 25 ஆவது ஆண்டாக கோமாதா பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் நிகழ்வு தொடங்கியது.
தொடர்ந்து நவகிரக ஹோமம், ஆயுஷ் ஹோமம், சுதர்சன ஹோமம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. பின்னர் இறுதியாக ஸ்ரீ தன்வந்திரி மகா ஹோமம் நடத்தப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபாடு நடத்தினர். பின்னர் அவர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.
















