நிலவில் நகரம் அமைப்பது குறித்த தனது திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்பை உருவாக்கும் இலக்குடன் செயல்பட்டு வந்தாலும், அதற்கு முன்னதாக நிலவில் ஒரு நகரத்தை உருவாக்குவது சாத்தியமானது என்று கூறியுள்ளார்.
செவ்வாயை விட நிலவு பூமிக்கு மிகவும் அருகில் இருப்பதால், அங்கு அடிக்கடி விண்கலங்களை அனுப்ப முடியும் என்றும், எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குள் நிலவில் ஒரு செயல்படும் நகரத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
















