உதகை ரேஸ் கிளப்பில் பூங்கா வேண்டாம் - பன்னடுக்கு பார்க்கிங் தளம் அமைக்க வலுக்கும் கோரிக்கை!
Mar 28, 2026, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதகை ரேஸ் கிளப்பில் பூங்கா வேண்டாம் – பன்னடுக்கு பார்க்கிங் தளம் அமைக்க வலுக்கும் கோரிக்கை!

Manikandan by Manikandan
Feb 9, 2026, 09:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதகை நகரின் மையப்பகுதியில் உள்ள ரேஸ் கிளப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் சூழலியல் பூங்கா அமைக்கும் முடிவுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உதகையில் நீண்டகால பிரச்னையாக இருக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரேஸ் கிளப்பில் பன்னடுக்கு பார்க்கிங் தளம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மாவட்டம் தமிழம் மட்டுமல்ல அண்டை மாநில மற்றும் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விரும்பி வரும் சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களில் வருகை தருகின்றனர். அந்த வாகனங்களை பார்க்கிங் செய்ய போதுமான இடவசதி இல்லாத காரணத்தினால் சாலைகளிலேயே நிறுத்தி வைப்பதும், அதன் மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் வரி செலுத்தாத காரணத்தினால் உதகை மையப்பகுதியில் அமைந்திருக்கும் குதிரைப் பந்தய மைதானத்தில், பார்க்கிங் அமைப்படுவதற்கு பதிலாக பூங்கா அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

உதகை நகரில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, கர்நாடக அரசின் கர்நாடக பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் உள்ள நிலையில், உதகை நகராட்சி கட்டுப்பாட்டில் சுமார் 10-க்கும் மேற்பட்ட சாலையோர பூங்காக்கள் உள்ளது. இத்தனை பூங்காக்கள் இருக்கும் போது மேலும் ஒரு பூங்கா தேவையற்றது எனவும், அந்த இடத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பன்னடுக்கு பார்க்கிங் தளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சுற்றுலாத் தளங்களில் சூழலியல் பூங்காக்கள் அவசியமான ஒன்று தான் என்றாலும் கூட, தற்போதைய போக்குவரத்து நெரிசலுக்கு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பார்க்கிங் அமைப்பதே சிறந்த முடிவாக அமையும் என்பதே உதகை பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

Tags: opposedLocal residentsPARKING BUILDBUILD PARKINGootyRace ClubUdhagamandalam townland reclaimedecological park
ShareTweetSendShare
Previous Post

விமானிகளுக்கு நண்பன் எதிரிகளுக்கு அசுரன் – சிம்மசொப்பனமாக மாறியிருக்கும் “ரஃபேல்” விமானம்

Next Post

எஸ்.ஐ.ஆர் நடைமுறைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் – உச்ச நீதிமன்றம்

Related News

கொடைக்கானல்:3வது நாளாக காட்டுத் தீயை அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்புத்துறை

காசிமேடு:மீன்பிடி துறைமுக இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்

கோவை பட்டீஸ்வரர் கோயில் தேரோட்டத்திற்கு அனுமதி மறுப்பு – பக்தர்கள் ஆர்பாட்டம்

தவெகவுடன் கூட்டணி அமைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை – அமித் ஷா விளக்கம்!

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வாகனத்தில் எடுத்துச்செல்லப்படட் ரூ. 50 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும் – ஐஐடி இயக்குனர் காமகோடி

மதுரை சித்திரை திருவிழா : மே 1-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா!

நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோரின் குடும்பத்தை பற்றி விமர்சனம் செய்த போது விஜய் எங்கே சென்றார் – சீமான் கேள்வி!

பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு – அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு!

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த பிரதமர் மோடிக்கு நன்றி – வானதி சீனிவாசன்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது – ஜோதிமணி எம்.பி வேதனை!

ஊருக்கேற்ப கொள்கை மற்றும் கூட்டணியை மாற்றும் திமுக – இபிஎஸ் கடும் விமர்சனம்!

மாணவிக்கு பாலியல் தொல்லை – அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு கைது!

மேற்கு ஆசிய போர் சூழல் நெருக்கடியை வெற்றிகரமாக கடப்போம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies