அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் ஆளும் அரசுக்கு அத்தனை இளக்காரமா? - நயினார் நாகேந்திரன்
Mar 28, 2026, 12:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் ஆளும் அரசுக்கு அத்தனை இளக்காரமா? – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 10, 2026, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் ஆளும் அரசுக்கு அத்தனை இளக்காரமா? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த சில தினங்களில் மட்டும் தமிழக அரசுப் பள்ளிகளில் தஞ்சம் புகுந்த விஷப்பூச்சிக்கும், விஷப்பாம்பிற்கும் இரு மாணவர்களை நாம் பலிகொடுத்த துயரத்தின் ரணம் ஆறும் முன்னரே, கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழத்தேனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி அப்பள்ளியின் மேல்நிலைத் தொட்டியை மரத்தின் கிளை வழியே ஏறி சுத்தம் செய்யும் காணொளி வெளியாகி நம்மை மேலும் பதறச் செய்வதாக தெரிவித்துள்ளார்.

சின்னஞ்சிறு குழந்தைகள் தொட்டியில் உள்ள நீரில் மூழ்கியோ அல்லது தவறி விழுந்தோ ஏதாவது நடக்கக்கூடாத அசம்பாவிதம் நடந்துவிடுமோ என நமக்கு உதறல் எடுக்கிறது. ஆனால், ஏழை எளிய மாணவர்களின் சுயமரியாதையையும், அவர்களின் பாதுகாப்பையும் ஒருசேர அடகு வைப்பது போல, “ஆளு கிடைக்கல அதான்” என்ற ஒற்றை வரியில் இச்சம்பவத்தை எளிதாகக் கடந்து விட்டார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் என அவர் கூறியுள்ளார்.

ஆள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி படிக்கும் மாணவர்களை இப்படித் துப்புரவுப் பணியாளர்களாகப் பயன்படுத்தும் துணிச்சல் ஆசிரியர்களுக்கு எங்கிருந்து வந்தது? ஒருவேளை ஊதியம் மிச்சம் என ஆளும் அறிவாலய அரசே அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இப்படியொரு ஏற்பாடு செய்துவைத்துள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசுப் பள்ளியில் நமது பிள்ளைகளைச் சேர்த்தால் படிப்பு வருமா எனச் சிந்தித்த தமிழகப் பெற்றோர்களை, அரசுப் பள்ளிக்குச் செல்லும் நமது பிள்ளைகள் உயிரோடு வீடு திரும்புவார்களா என வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருக்கும் நிலைக்குத் தள்ளியது தான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்பதற்கான இலக்கணமா? என அவர் வினவியுள்ளார்.

அப்பா என்ற அடைமொழிக்கு ஆசைப்படும் முதல்வர் ஸ்டாலின்
இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களின் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பாரா அல்லது எப்பொழுதும் போல கைகட்டி வேடிக்கை மட்டும் பார்ப்பாரா? என்றும் நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: bjp nainar nagendranbjp nainar nagendran speechnainar nagendran issuenainar nagendran campaignmla nainar nagendrannainar nagendran vs stalinNainar NagendranBJP MLA Nainar NagendranNainar Nagendran speechNainar Nagendran pressmeetnainar nagendran bjp
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தினர் 7வது நாளாக போராட்டம்!

Next Post

வங்கதேச பொருட்களுக்கான வரி 19% ஆக குறைப்பு – டிரம்ப் அறிவிப்பு!

Related News

அமமுக வேட்பாளர் பட்டியல் – சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!

மதுரையில் சுந்தர்.சி போட்டி – ஏசி. சண்முகம் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

காஞ்சிபுரம்:மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை:விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயில் மீது திமுகவினர் விளம்பர பேனர்!

சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டி : 30-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்!

Load More

அண்மைச் செய்திகள்

கொடைக்கானல்:3வது நாளாக காட்டுத் தீயை அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்புத்துறை

காசிமேடு:மீன்பிடி துறைமுக இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்

கோவை பட்டீஸ்வரர் கோயில் தேரோட்டத்திற்கு அனுமதி மறுப்பு – பக்தர்கள் ஆர்பாட்டம்

தவெகவுடன் கூட்டணி அமைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை – அமித் ஷா விளக்கம்!

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வாகனத்தில் எடுத்துச்செல்லப்படட் ரூ. 50 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்!

உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும் – ஐஐடி இயக்குனர் காமகோடி

மதுரை சித்திரை திருவிழா : மே 1-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா!

நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோரின் குடும்பத்தை பற்றி விமர்சனம் செய்த போது விஜய் எங்கே சென்றார் – சீமான் கேள்வி!

பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு – அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies