பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல்லில் உள்ள கோழி பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கோழி வளர்ப்புப் பண்ணைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் நாமக்கல்லில் உள்ள பண்ணைகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி தொழிலாளர்கள் கிருமி நாசினி மருந்து மூலம் கை, கால்களை சுத்தம் செய்த பிறகே பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் வளாகத்திற்கு வந்து செல்லும் வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
















