டாய்லெட் பேப்பரைவிட அமெரிக்கா தங்களை மோசமாக நடத்தியதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
அமெரிக்கா தங்களின் தேவைக்காக பாகிஸ்தானை பயன்படுத்துகிறது எனவும்
தேவை நிறைவடைந்ததும் தங்களை டாய்லெட் பேப்பரை விட மோசமாக தூக்கி எறிவதாகவும் சாடினார்.
1999ம் ஆண்டுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் போரில் பாகிஸ்தானின் அப்போதைய ராணுவ தளபதிகள் தலையிட்டதாகவும்
இந்த விஷயத்தில் அமெரிக்காவின் உதவியை நாடியது மிகப்பெரிய தவறு எனவும் கவாஜா ஆசிப் தெரிவித்தார்.
முன்னாள் ராணுவ ஆட்சியாளர்களான ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப் ஆகியோர் பாகிஸ்தானை வெளிப்புறப் போர்களில் சிக்க வைத்ததாகவும்
இந்த விவகாரத்தில் நட்பு நாடுகள் பாகிஸ்தானை கைவிட்ட பிறகும், நாம் அதன் விளைவுகளை சந்தித்து வருகிறோம் என அவர் கூறினார்.
















