ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய்துறை கிராம உதவியாளர்கள் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் போரட்டக்களமாக மாறியது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலமுறை ஊதியம், ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், 9ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக்கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
3 சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போராட்டக்களமாக மாறியுள்ளது.
















