மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது.
மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்கு பின் சபரிமலை நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
தந்திரி மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைக்க உள்ளார்.
தொடர்ந்து வரும் 17 ஆம் தேதி வரை தினமும் காலையில் நெய் அபிஷேகமும், இரவில் படிபூஜையும் நடைபெற உள்ளன.
பின்னர் வரும் 17 ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















