ப்ரொமோஷனில் பங்கேற்காத பிஜூ மேனன் மீது வழக்கு தொடர தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.
பிரபல மலையாள நடிகரான பிஜூ மேனன், தமிழில் தம்பி, மதராஸி உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
இவர், விஷ்ணு நாராயண் இயக்கத்தில் நடித்த ‘நடன சம்பவம்’ என்ற மலையாளப் படம், கடந்த 2024-ம் ஆண்டு வெளியானது.
இதன் வெளியீட்டின்போது ப்ரொமோஷனில் பிஜு மேனன் வரவில்லை.
இதனால் தனக்கு வரவேண்டிய பணத்தில் 25 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ள தயாரிப்பாளர், வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
















