எக்ஸ்பிரஸ் வேகத்தில் வளர்ச்சி திட்டம் - முப்பரிமாண மாடலில் புவனேஷ்வர் ரயில் நிலையம்
Sep 5, 2026, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எக்ஸ்பிரஸ் வேகத்தில் வளர்ச்சி திட்டம் – முப்பரிமாண மாடலில் புவனேஷ்வர் ரயில் நிலையம்

Manikandan by Manikandan
Feb 12, 2026, 09:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒடிசா மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 415 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக அமைக்கப்படும் புவனேஷ்வர் ரயில் நிலையம் குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற ஒடிஷா மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள கட்சியை வீழ்த்தி பாஜக தனது ஆட்சியை அமைத்தது. முதல்வராக மோகன் சரண் மாஜி பொறுப்பேற்ற பின் மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரத்தை டில்லி, மும்பை சென்னை போல் வளர்ந்த நகரமாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் மத்திய அரசு, தினசரி லட்சக்கணக்கான ரயில் பயணிகள் வந்து செல்லும் புவனேஸ்வர் ரயில் நிலையத்தை 415 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. ரயில்நிலையமாக மட்டுமில்லாமல், பேருந்து முனையம், பிரம்மாண்ட வணிக வளாகங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படும் இந்த மல்டி மாடல் மையம் நடப்பாண்டின் இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

ரயில் நிலையத்தை விமான நிலைய தரத்திற்கு உயர்த்த ஆறு நடைமேடைகளையும் இணைக்கும் 108 மீட்டர் நீளமுள்ள ஏர்-கான்கோர்ஸ் அமைக்கப்படுகிறது. 34 மின்தூக்கிகள், 20 நகரும் படிக்கட்டுகள், ஓய்வறைகள், உணவு வளாகங்கள் மற்றும் நவீன கியோஸ்க்குகள் இடம் பெறுவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. 11 மாடி மேற்குத் தொகுதி மற்றும் 3 மாடி கிழக்குத் தொகுதி கட்டடங்கள், பசுமை நிலப்பரப்பு, EV சார்ஜிங் நிலையங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் இருப்பதால் புவனேஷ்வர் நிலையம் ஒடிசாவின் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடநெருக்கடி மிகுந்த பகுதியில் முப்பரிமாண மாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மிகத்துல்லியமாக இந்த கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. புவனேஸ்வரில் ஒரே கூரையின் கீழ் பஸ் மற்றும் ரயில் சேவைகள் இணைக்கப்படுவது முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது. ஒடிசாவின் இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் வாயிலாக பயணிகள் ஒரு வாகனத்திலிருந்து மற்றொரு வாகனத்திற்கு மாறுவதற்கான பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. பாஜக ஆட்சி அமைந்த பின்பு அங்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த மல்டி மாடல் மையம் ஒட்டுமொத்த இந்தியாவும் ஒடிஷாவை திரும்பி பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

 

Tags: ODISHA railway stationsOdisha assemplybjpodisharailway stationsNaveen Patnaik
Share
Tweet
SendShare
Previous Post

சூலூர் அருகே 6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கே வராத குடிநீர் தொட்டி-அரசு தாகம் தீர்க்குமா? -சிறப்பு தொகுப்பு

Next Post

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – இந்திய துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கர் சென்னையில் ஆலோசனை!

Related News

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies