தமிழ்நாடு காவல்துறையில் நிர்வாக காரணங்களுக்காக 2 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 3 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சிலம்பரசன், சட்டம் ஒழுங்கு A.I.Gஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் நெல்லை மேற்கு காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்த மதன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகர துணை ஆணையராக பணியாற்றி வந்த விஜயகுமார், நெல்லை மாநகர மேற்கு துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
















