மஹா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மஹா சிவராத்திரியையொட்டி சென்னை மற்றும் புறநகரில் உள்ள சிவாலயங்கள் விழாக்கோலம் பூண்டது. காலை முதலே கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
சென்னையில் பிரசித்திப்பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விடிய விடிய கண்விழித்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
















