சூழலை கருத்தில் கொண்டே இந்தியா கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சில நாட்களுக்கு முன் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதனை அறிவித்த அதிபர் டிரம்ப், ரஷ்யாவுக்கு பதிலாக இனி வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யும் எனக் கூறினார்.
இந்நிலையில் எண்ணெய் இருப்பு, செலவு மற்றும் சர்வதேச சூழல்களை கருத்தில் கொண்டே கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது என அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
















