சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே, 16வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாடியை சேர்ந்த மகாத் என்பவர், அதே பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கில் திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
அதில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உமா மகேஸ்வரி தீர்ப்பளித்தார்.
















