16 நாட்களாக நடைபெற்று வந்த அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக அங்கன்வாடி ஊழியர்களுடன் தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, பணி நிரந்தரம் உள்ளிட்ட சில கோரிக்கையை அரசு ஏற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அங்கன்வாடி ஊழியர்களின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்
















