மத்திய பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மிகவும் தேவையான ஒன்றுதான் என, இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் காந்திபுரம் சிக்னலில், சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சந்திரயான் மாதிரி இங்கு வைக்கப்பட்டுள்ளது நாம் அடுத்தக்கட்ட அறிவியலில் எந்த அளவுக்கு சென்றிருக்கிறோம் என்பதை காட்டுவதாகவும், இது சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஊக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மிகவும் தேவையான ஒன்றுதான் என்றும், குலசேகரப்பட்டினம் அடுத்தக்கட்ட மையமாக வரப்போவதாகவும் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
















