செமிகண்டக்டர் மற்றும் மின்னணு துறையில் இந்தியா உலகளாவிய தலைமையை ஏற்க வேண்டுமென, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பாக்ஸ் சிலிக்கா ஒப்பந்தம் குறித்த நிகழ்ச்சியில் பேசிய அவர், செமிகண்டக்டர் தொழிலுக்கு மேலும் சுமார் 10 லட்சம் திறமைசாலிகள் தேவைப்படுவார்கள் என்றும், மாணவர்கள் உலகின் சிறந்த செமிகண்டக்டர் வடிவமைப்பு கருவிகளை அணுக முடியும் எனவும் குறிப்பிட்டார்.
நாம் CHIPS என்று சொல்லும்போது சிலருக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ்தான் ஞாபகம் வரும் என்று கூறிய அஷ்வினி வைஷ்ணவ், சில நேரங்களில் அவர்கள் நாடாளுமன்றத்தில் அழுவார்கள், சில நேரங்களில் வேறு எங்காவது அழுவார்கள் என்று எதிர்க்கட்சிகளை மறைமுகமாக சாடினார்.
















