உத்தரப் பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இஸ்லாமிய மத குருவை போலீசார் கைது செய்தனர்.
கபூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் அன்றிரவே அவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
அதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மவுலானா என்ற இஸ்லாமிய மதகுரு தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இஸ்லாமிய மதகுரு மவுலானாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
















