ஆப்கானிஸ்தானில் ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிக்க சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய சட்டத்தை தலிபான் அரசு கொண்டு வந்துள்ளது.
அதன்படி, பெண்களை அடிக்கும்போது காயம் தெரியாமலும், எலும்பு முறியாமலும் அடிக்க வேண்டும் எனவும் இதனை மீறினால் கணவருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்க கூடாது, தனியாக வெளியே செல்லக்கூடாது என தலிபான்கள் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், தற்போது மனைவியை அடிப்பதற்கு அனுமதி வழங்கியது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்டுத்தியுள்ளது.
















