தமிழகத்திற்கு வந்து பணிபுரியும் வடஇந்தியர்கள் குறித்து திமுக எம்பி கனிமொழி சோமு விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நங்கநல்லூரில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு, ஹிந்தி படித்துவிட்டு தமிழகம் வரும் வடஇந்தியர்கள், ஒன்று கஞ்சா விற்கிறார்கள்;
அல்லது பானிபூரி விற்கிறார்கள் எனக் கூறினார். திமுக எம்பி கனிமொழி சோமுவின் இந்த பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
















