அமெரிக்காவில் வீடியோ கேமை பிடுங்கிவிட்டு தூங்குமாறு அறிவுறுத்திய வளர்ப்பு தந்தையை 11 வயது மகன் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
பென்சில்வேனியா மாகாணத்தின் நியூகேஸில் பகுதியைச் சேர்ந்த கிளேட்டன் டயட்ஸ் என்ற 11 வயது சிறுவன், நிண்டெண்டோ என்ற ஜப்பான் வீடியோ கேமை நள்ளிரவில் விளையாடி உள்ளான்.
அப்போது சிறுவனின் வளர்ப்பு தந்தை டக்ளஸ் டயட்ஸ், நிண்டெண்டோ கேமை பறிமுதல் செய்து துப்பாக்கி பெட்டகத்தில் வைத்து பூட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், நீண்ட நேரமாகத் தேடி, சாவியைக் கண்டுபிடித்துள்ளான்.
பின்னர் நிண்டெண்டோவுடன் அங்கிருந்த ரிவால்வர் துப்பாக்கியையும் எடுத்த சிறுவன், ஆத்திரத்தில் வளர்ப்பு தந்தையை சுட்டுக் கொன்றான். இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
















