மதுரையில் பல்வேறு பகுதிகளில் திமுகவை மறைமுகமாக விமர்சித்து காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டியதால் அக்கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது என முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் காங்கிரஸ், திமுகவினர் இடையே தொடர்ந்து வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மதுரையின் பல்வேறு பகுதிகளில், திமுகவை மறைமுகமாக விமர்சித்து காங்கிரஸ் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் “வெள்ளைக்காரனையே விரட்டியடித்த காங்கிரஸார், இந்த கொள்ளைக்காரர்களிடம் அடிபணிவோமா” என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், அந்த போஸ்டரில் மாணிக்கம் தாகூரின் புகைப்படமும் உள்ளது. இந்த போஸ்டர் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
















