மதுரை தெப்பக்குளம் அருகே பாவலர் நகரில் பாஜக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்று பேசிய மாவட்ட பாஜக தலைவர் மாரி சக்கரவர்த்தி, பாஜக சார்பில் தெருமுனை கூட்டம், போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுப்பதாகவும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
வரும் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
















