தலைமறைவாக உள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்து தகவல் தந்தால், 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என, என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.
பெங்களூருவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்ட தீவிரவாத கும்பலை கடந்த 2023ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்ட நிலையில், பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள பயங்கரவாதி நசீர், சிறைக்குள் இருக்கும் கைதிகளை பயங்கரவாத செயல்களில் ஈடுபட தூண்டியது தெரியவந்தது.
நசீருக்கு உதவிய உதவி காவல் ஆய்வாளர் ஜான் பாஷா, சிறை மருத்துவர் நாகராஜ், லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதி ஜுனைத் அகமதுவின் தாயார் அனீஷ் பாத்திமா ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதில் ஜுனைத் அகமது குறித்து தகவல் கிடைக்காத நிலையில், அவர் குறித்து தகவல் கொடுப்பவருக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.
மேலும், ஜுனைத் அகமதுவின் புகைப்படம், முகவரி உள்ளிட்ட விவரங்களை சுவரொட்டி மூலம் என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது.
















