ஏஐ தொழில்நுட்பம் இல்லாத நிறுவனங்கள் இனி இருக்காது என்பதால், நிறுவனங்களை மேலாண்மை செய்பவர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாகி வருவதாக, சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் சென்னை ஐஐடி என்ற நோக்கத்தில் இளங்கலை ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி, எலாக்ட்ரானிக் சிஸ்டம், டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட 4 இளங்கலை அறிவியல் பட்டப்படிப்புகள் சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்டுள்ளன.
இதில் இளங்கலை மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் படப்படிப்பை காமகோடி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏ.ஐ தொழில்நுட்பம் குறித்த அவசியத்தை எடுத்துரைத்தார்.
















