நாமக்கல்லில் மத்திய அமைச்சர் எல்.முருகன் – அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி உடன் ஆலோசனை நடத்தினார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் திருச்செங்கோடு சாலையில் உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவரை, அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தங்கமணி நேரில் சந்தித்தார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பில், மார்ச் 1ம் தேதி பிரதமரின் தமிழகம் வருகை குறித்து பேசியதாகவும், தேர்தல் தொடர்பாக விவாதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
















