புகழ்பெற்ற AI- மாடல்களை விட இந்தியாவின் சர்வம் AI சிறப்பு! -சுந்தர் பிச்சை ..சிறப்பு தொகுப்பு
Mar 15, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புகழ்பெற்ற AI- மாடல்களை விட இந்தியாவின் சர்வம் AI சிறப்பு! -சுந்தர் பிச்சை ..சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Feb 22, 2026, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் நடந்த AI IMPACT உச்சிமாநாட்டில் பேசிய கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியா உருவாக்கியுள்ள சர்வம் AI தம்மை ஆச்சரியப்பட வைத்ததாக கூறியுள்ளார். மேலும், கூகுள், ஜெமினி மற்றும் ஓபன் ஏஐயின் சாட்ஜிபிடி உள்ளிட்ட புகழ்பெற்ற AI- மாடல்களை விட சர்வம் AI மாடல் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்த இந்த ஆண்டுக்கான AI AI IMPACT உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சுந்தர் பிச்சை, ஒவ்வொரு முறை இந்தியாவுக்கு வரும்போது இந்தியாவில் உலகின் சிறந்த டெவலப்பர்களைப் பார்ப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் தொழில்முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பு நாளுக்கு நாள் செழித்து வளர்ந்து வருவதாகவும் பாராட்டியுள்ளார்.

குறிப்பாக இந்திய மொழிகள் மற்றும் சூழல்களுக்கு ஏற்ப உள்ளூர் AI மாடல்களை உருவாக்குவதில் சர்வம் AI- சர்வதேச அளவில் முதன்மையானதாக மிகச் சிறப்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

சுந்தர் பிச்சை மட்டுமில்லை AI உச்சி மாநாட்டுக்கு வந்த அனைத்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் AI துறை சார்ந்த வல்லுனர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட சர்வம் AI தொழில்நுட்பம்.

இதே உச்சி மாநாட்டில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட AI-யை இந்தியர்களுக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதைக் காட்டுவதாக அறிவித்து, சர்வம் AI-யை, சர்வம் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆன பிரதியுஷ் குமார் அறிமுகப் படுத்தினார்.

குரல் கட்டளைகள் மூலம் பயன்படுத்தக்கூடிய மற்றும் 22 இந்திய மொழிகள் மூலம் அணுகக்கூடிய சர்வம் 105B மற்றும் சர்வம் 30B என்ற இரண்டு சர்வம் AI மாடல்களை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் மிகப்பெரிய AI மாடல்களை உருவாக்குவதை விட AI-யில் இறையாண்மை மிகவும் முக்கியமானது என்று சர்வம் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் விவேக் ராகவன் கூறினார்.

105 பில்லியன் அளவுரு மாதிரிகளால் உருவாக்கப்பட்ட இந்த சர்வம் மாடல்கள் பகுத்தறிவு பணிகளில் DeepSeek R-யை விட சிறப்பாகவும் செயல்திறனில் Gemini Flash போன்ற உலகளாவிய AI மாடல்களை விடவும் உயர்தரத்துடனும் செயல்படுகிறது.

OCR துல்லியம், இந்திய மொழிகள் & உச்சரிப்புகள், பேச்சுக்கு-உரை & உரைக்கு-பேச்சு எனும் குரல் அடிப்படையிலான AI ஆகிய 3 முக்கிய பகுதிகளில் ChatGPT & Google Gemini யை விட சர்வம் AI சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது

மேலும் இந்தியாவின் முதல் AI-யால் இயங்கும் ஸ்மார்ட் கண்ணாடிகளான சர்வம் கேஸையும் வெளியிட்டுள்ளனர். இந்த AI உச்சிமாநாட்டில் சர்வம் கண்ணாடிகளை முதலில் அணிந்து டெமோ செய்த முதல் நபர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இது நேரடியாக ஆடியோவைக் கேட்டு புரிந்துகொண்டு பதில் அளிக்கிறது. இந்திய உச்சரிப்புகள் சரியாக புரிந்து கொண்டு, பின்னணி இரைச்சல் மற்றும் குறுக்கீடுகள் ஏதுமில்லாமல் முழுமையான வகையில் பதிலை தருகிறது.

பெங்களூருவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான சர்வம் – இந்தியாவின் OpenAI என்றுதான் கூறப்படுகிறது.

2010ம் ஆண்டில், வடிவமைப்பு தொழில்நுட்ப வேலையை விட்டுவிட்டு,130 கோடிக்கும் அதிகமான இந்தியர்களை உள்ளடக்கிய பயோமெட்ரிக்ஸ் ஆதாரை உருவாக்கும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் பணியாற்றிய விவேக் ராகவன், தனது நண்பர் பிரதியுஷ் குமார் உடன் சேர்ந்து 2023ம் ஆண்டு சர்வத்தைத் தொடங்கினார்

தொடர்ந்து OPEN SOURCE வகையில் 120 பில்லியன் அளவுரு பெரிய மொழி மாதிரியை உருவாக்குவதற்கான அரசாங்க ஆணையை இந்த நிறுவனம் பெற்றது.

இந்திய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய, கணிதத்தில் வலிமையான ஒரு LLM-ஐ உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

100B+ மாதிரியை உருவாக்குவது வெறும் குறியீடு மட்டுமல்ல; ஒரு தளவாடப் போர் என்று தான் சொல்லவேண்டும்.

உலகத்தில் மிகப்பெரிய சாதனை என்று எல்லோரும் சொல்வதுண்டு. ஆனால் AI உச்சி மாநாட்டு மேடையில் “உலகில் மிகப்பெரிய சாதனை” உண்மையில் எப்படி இருக்கும் என்பதை சர்வம் AI உலகுக்குக் காட்டியுள்ளது.

Tags: CEO Sundar PichaiDeepSeek R-Google GeminiGoogle Sundar PichaichatgptAIgoogleopen ai
ShareTweetSendShare
Previous Post

உதகை மலை ரயில் பயணச்சீட்டு கட்டணம் 5 % அதிகரிப்பு – தெற்கு ரயில்வே

Next Post

கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் – வீட்டுமனை பட்டா வழங்கி ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்ற தனியார் நிறுவனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies