தவெகவும், காங்கிரசும் கூட்டணி அமைத்தால் திமுகவுக்கு மாரடைப்பு வரும் என, தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக எந்த கட்சியை விலை கொடுத்து வாங்க தயாராக இல்லை என்றும், அரசியல் கட்சி ஒன்றை திமுக விலை கொடுத்து வாங்கி விட்டதாகவும் கூறினார்.
தவெகவுடன் கூட்டணிக்கு வர சில கட்சிகள் விரும்புவதாகவும், அந்த கட்சிகளுடன் விஜ்ய் பேசி வருவதாகவும் அவர் கூறினார். மார்ச் 9 ம் தேதி தவெகவின் அரசியல் பாம் வெடிக்கும் வெடிக்கும் என்றும், அவர் தெரிவித்தார்.
















