சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
பின்னர் சிவகங்கையில் உள்ள ராணி வேலுநாச்சியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், வேலுநாச்சியாரின் வாரிசுதாரரான மதுராந்தகி நாச்சியாரை சந்தித்து நலம் விசாரித்து, அரண்மனைக்குள் சென்று பழங்கால பொருட்களை பார்வையிட்டு, அரண்மனை சார்பில் அளிக்கப்பட்ட தேநீர் விருந்திலும் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதுதான் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு நல்லது என்று தெரிவித்தார்.
















