திமுக ஆட்சியில் குயவர் சமுதாய மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார்.
திருச்சி தென்னூர் உழவர் சந்தை பகுதியில், அகில இந்திய குயவர் உரிமை கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஆட்சியில் குயவர் சமுதாய மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்களை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முடக்கியதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் நேரு மற்றும் அரசு அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டுள்ளது குறித்து அமலாக்கத்துறை ஆதாரங்கள் கொடுத்தும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
















