தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக 300 க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் மூடப்பட்டுள்ளது மத்திய ஜவுளி அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஜவுளி தயாரிப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்தநிலையில், மாநிலத்தில் 2021-22 மற்றும் 2023-24க்கு இடைப்பட்ட நிதியாண்டுகளில், தமிழ்நாட்டில் 300 க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் செயல்படாமல் உள்ளதாக மத்திய ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு, அதிக வங்கி வட்டி வீதம், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி ஆலைகள் மூடப்படுவதாக தென்னிந்திய நூற்பு ஆலை சங்கம் தெரிவித்துள்ளது.
















