ஹரியானாவில், அரசின் வங்கிக்கணக்குகளில் 590 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது தொடர்பாக, தனியார் வங்கி ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சண்டிகரில் செயல்படும் ஐ.டி.எஃப்.சி. பர்ஸ்ட் என்ற தனியார் வங்கிக்கிளையில் ஹரியானா அரசின் பல்வேறு வங்கிக் கணக்குகள் பயன்பாட்டில் உள்ளன.
இதில் பல்வேறு துறைகளில் உள்ள கணக்குகளில் 590 கோடி ரூபாய் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ஹரியானா அரசு அளித்த புகாரின்பேரில் சண்டிகர் போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு 4 ஊழியர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















