இனியும் தான் அமைதியாக இருந்தால், அது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமாகிவிடும் எனக்கூறிய வி.கே.சசிகலா, புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
கமுதி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்திற்காகவும், தமிழக மக்களுக்காகவும் புதிய களத்தை காணப்போகிறோம் என்றும், ஒரு புதிய கட்சியை தொடங்கப்போகிறோம் எனறும் அவர் தெரிரிவித்தார்.
அண்ணா, MGR, ஜெயலலிதா வழியில் சாமானிய மக்களுக்கான கட்சியாக இருக்கும் என்றும், எதிரிகளையும் துரோகிகளையும் வேரறுக்கும் கட்சியாக இயங்கும் என்றும் அவர் கூறினார்.
நம் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் கூறினார்.
















