தேர்தல் ஆணையர்கள் மாநாட்டில், ஒருங்கிணைந்த மற்றும் துல்லியமான வாக்காளர் பட்டியலை உருவாக்குவதற்கான தேசிய பிரகடனம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ‘தேசிய பிரகடனம் 2026’ ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
துல்லியமான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதே ஜனநாயகத்தின் அடிப்படை எனவும் தேர்தல்களை வெளிப்படையாக நடத்துவது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் எனவும் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் சட்டங்களை, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தல் சட்டங்களுடன் ஒருங்கிணைக்க இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநாட்டில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை துணை தேர்தல் ஆணையர்கள் தலைமையிலான சட்ட மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் கூட்டு குழு ஆய்வு செய்து, அடுத்த 3 மாதங்களில் மாநிலம் வாரியாக வழிமுறைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது…
















