நாகர்கோவிலில் இலவச வீடு வழங்க கோரி திமுகவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், முதலமைச்சரின் வாகனத்தை வழிமறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பொன்னப்ப நாடார் மணி மண்டபத்தை திறந்து வைத்துவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முதலமைச்சர் கார் வரும் வழியில் திமுகவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மறியலில் ஈடுபட்டார்.
கட்சிக்காக எவ்வளவோ உழைத்துள்ள நிலையில் இலவச வீடு வழங்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் போலீசார் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
















