புதுக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி அருகே வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமிக்கு பன்னீர் செல்வம் என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பன்னீர் செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி கனகராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றவாளி பன்னீர்செல்வத்திற்கு 23 ஆண்டுகள் சிறை தண்டணையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
















